Visit Website   Facebook icon
Tamil Catholics Association of USA
உலக திருமண நாள் மற்றும் தம்பதியர் தின வாழ்த்துக்கள்
அன்புள்ள அங்கத்தினர்களுக்கு,

நமது சங்க நிர்வாக குழு சார்பாக "தம்பதியர் தின" வாழ்த்துக்கள். 2015-ம் வருடத்தில் பொறுபேற்றிருக்கும் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களையும் புதிய நிர்வாகிகளையும் வாழ்த்தி வரவேற்கிறேன். நமது நிர்வாகக்குழு சங்க உறுப்பினர்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் இளம் பிள்ளைகளுக்கும் பயன் படும் வகையில் பல புதிய செயல் திட்டங்களை திறம்பட தீட்டி செயல்படுத்தவுள்ளது. நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து மேலும் வளர வாழ்த்துகிறேன். நமது சங்கத்தின் வளர்ச்சி பாதையில் இந்த வருடம் ஒரு மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன்.

அன்புடன்
ஜேம்ஸ் ரெத்தினம்
தலைவர்
Priest Message
அருட்பணி. சகாய ஜஸ்டஸ்


கிறிஸ்து இயேசுவில் அன்பிற்குரிய சகோதரிகளே! சகோதரர்களே!!

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமண அன்பால் ஒன்றித்து
இணைந்து வாழும் அடிப்படை சமூக அன்பே குடும்பம்.
இக்குடும்ப வாழ்வில் முதலும் முடிவும் மையமும் அன்பே.

அன்பின் அழகுகளை அருமை பெருமைகளை
தூய பவுலடிகளார் கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில்
மிக அழகாக பதிவு செய்துள்ளார். (1 கொரி 13:1-13)

எத்தனை முறை படித்தாலும்
தெவிட்டாத தேனமுது.

நான் மானிடரின் மொழிகளிலும்
வான தூதரின் மொழிகளிலும் பேசினாலும்
அன்பு எனகில்லையேல்
ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலவேன்.

அன்பு பொறுமையுள்ளது ;
நன்மை செய்யும்;
பொறமை படாது;
தற்புகழ்ச்சி கொள்ளாது;
இறுமாப்பு அடையாது;
இழிவானதை செய்யாது;
தன்னலம் நாடாது;

இயேசு மணவாளன்.
திருச்சபை மணவாட்டி .
இயேசுவின் தலையோடு
இணைந்திருக்கும் உடலே திருச்சபை.
இயேசுவையும் திருச்சபையையும் பிரிக்க இயலாது.
இயேசுவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள
"அன்புறவே"
தம்பதியர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை.


சுட்டெரிக்கும் சூரியனின் சுடுகதிர்களால்
பாலைவனமே கொதித்துக் கொண்டிருந்து
தாகத்தால் தவித்த இரு மான்கள்... சிறிதளவு
கலங்கிய நீரை கண்டுகொள்கின்றன.
ஆனாலும்
ஆண்மான் குடிகட்டுமே என்று பெண்மானும்
பெண்மான் குடிகட்டுமே என்று ஆண்மானும்
பாவனை செய்து அன்பிற்கு இலக்கணம் வகுத்தன.

இலக்கிய மான்களைப்போன்று
தமிழ் தம்பதியர்
அன்புடை நெஞ்சங்களாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

"அன்பே" தம்பதியரின் வாழ்விற்கு
ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைந்திட
இறையாசீர் வேண்டுகிறேன்.

Gift of Magi
ஜான் லாரென்ஸ்


ஆங்கில எழுத்தாளர் ஓ. ஹென்றியின் படைப்பு, ஞானிகளின் பரிசு (The Gift of the Magi). அந்த அற்புத படைப்பின் என் கலவை தமிழாக்க முயற்சி.

புருசன் பொஞ்சாதி
ரெண்டு பேரு
புரூக்கிளின் நியூயார்க்
அவுங்க ஊரு

போட்ற துணியிலேர்ந்து
எல்லாமே பழசு
ப்ரோக்கன் பர்னிச்சர் தாங்க
ஒரே சொகுசு

பெருமையா சொல்றதுக்கு
இருந்தது ஆளுக்கொரு சொத்து - அதையும்
பொறாமையா பாக்கறதே
தினசரி ஊர்ல நடக்கற கூத்து

அந்த பொண்டாட்டியோட பொக்கிஷம்
நீளமான கேசம்
வாரத்துக்கு ஒரு முறைதான் குளிச்சாலும்
வாசனை வீசும்

ஐயா அலட்டுர ஐட்டம்
பந்தாவான பாக்கெட் வாட்ச்சு
டவர்ல காமிக்கற டைமும்
இதுவும் எக்சாட் மேட்சு

அரைபட்டினி தினசரி
வந்தது வெடிங் அணிவர்சரி
லக்ஸ்சுரி ஐட்டம் தோசை
கிஃப்ட்டு கொடுக்க மட்டும் ஆசை

அன்பான கணவனோட
அழகான வாட்ச்சிக்கு
மேட்ச்சான சேய்ன்னு வாங்க
வித்தாங்க தலைமுடியை காசுக்கு

மனசெல்லாம் மனைவியோட
மணமான கேசத்தின் நெனப்பு
தயங்காம வித்தாரு வாட்ச்சை
வித்த காசுக்கு கிடைச்சது தங்க சீப்பு

தன் சொத்தை இழந்து, தன்
துணையோட சொத்தை
சிறப்பாக்க நெனச்ச, இவங்க
அன்பு தாங்க நிலையான சொத்து!!!

அன்பு தாங்க நிலையான சொத்து!!!
Previous General Meeting Update

நமது சங்கத்தின் 2014-ம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆடம்பர திருப்பலி, திசம்பர் 7-ம் தியதி வெகு சிறப்பாக பத்து அருட்பணியாளர்களுடன் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து புதிய நிர்வாகக்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுகப்படுதபட்டனர். பின்னர் சிறுவர், சிறுமியர், இளம்பிள்ளைகள் மற்றும் பெரியோர்களின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக அரங்கேறியது. சிறப்பு நிகழ்ச்சியாக திரு. லாரன்ஸ் அவர்கள் எழுதி இயக்கிய சிரிப்பு நாடகம் பலத்த கைதட்டலுடன் அரங்கேறியது.பின்னர் கிறிஸ்துமஸ் தாத்தா அனைத்து குழந்தைகளுக்கும் பரிசும், இனிப்பும் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.இறுதியில் அறுசுவை விருந்து உபசரிக்கப்பட்டது.
தமிழ் மன்ற செய்திகள்

தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பளராக திரு. லாரன்ஸ் அவர்கள் செயலாற்ற மனமுவந்துள்ளார்கள். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழ் பள்ளி

தமிழ் பள்ளி மூன்று பிரிவுகளாக செயல் பட்டு வருகிறது. மற்றும் நான்காவதாக மழலைக்கல்வி 4-6 வயது குழந்தைகளுக்கு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் அடிப்படை மற்றும் இடைநிலை மாணவர்கள் தமிழ் நாடு அரசின் தமிழ் இணைய கல்விக்கழக தேர்வு எழுதவுள்ளார்கள் . மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆசிரியர்களாக அடிப்படை நிலை திருமதி. டாபினி அவர்களும், இடை நிலை - 1 திரு. பீட்டர் அவர்களும் மற்றும் இடை நிலை -2 திருமதி. ஹேமா அவர்களும் தொண்டாற்றுகிறார்கள்.

தமிழ் பணி

நமது சங்கம் ஏற்கனவே பல விதங்களில் தமிழ் பணி செய்து வருகிறது. இதை மேலும் மெருகூட்ட தமிழ் கவிதை, கட்டுரை மட்டும் மேடை நிகழ்சிகள் (சிரிப்பு பேச்சு, விவாத அரங்கம், பட்டி மன்றம்) போன்றவற்றை வரும் பொதுககுழுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள்ள அங்கத்தினர்கள் செயற்குழு உறுப்பினர்களையோ அல்லது ஒருங்கிணைப்பாளாரையோ அணுகவும்.
TCA Account Status:
Account Status
(As of 02/08/2015)
General A/C* Long Term A/C
Opening Balance $8944.00 $1,063.08
Revenue $9506.00 $0.22
Expenses ($8563.00) $0.00
Closing Balance $9877.00 $1,063.32
* General Account includes amount Christmas donation, Sponsorship and 2015 membership.

Palm Sunday Mass

Date: March 29, 2015
Bernard of Clairvaux,
500 U.S. HWY. 22,
Bridgewater, NJ 08807


Divine Mercy Mass

Date: April 12, 2015
St Cecila Church,
10 Kingston Lane,
Monmouth Junction, NJ 08852
You are receiving this email because you expressed interest in TCA through our website, or a member of association. Please send an email to tamilcatholicsusa@gmail.com with subject as Unsubscribe to be removed from mailing list.